இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

பகுதி - 12 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

மாநில ஒருங்கிணைப்பு கூட்டங்கள்
பி.17. மாநில ஒருங்கிணைப்புக் குழு, 5 மாதங்களுக்கு ஒரு முறை கூட வகுத்துரைக்க உள்ளபடி தனது கூட்டங்களில் பணிகளை மேற்கொள்ளும்போது விதிகளை அனுசரிக்கும்.
மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணிகள் 
பி.18.து.பி.1. மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணி யாதெனில் இச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, ஊனங்கள் பற்றிய விஷயங்களில் மாநில தலைமை மையமாக செயல்பட்டு ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க விரிவான கொள்கை தொடர்ந்து பரிணமிக்க ஆவன செய்தல்.

து.பி.2. குறிப்பாகவும், முன் சொன்ன பணிக்கு முரண்படாமலும், மாநிலத்துக்குள் பின்வரும் பணிகளில் அனைத்தையுமோ ஏதேனும் ஒன்றையோ ஆற்றலாம்.  அவையாவன:
           அ. ஊனமுற்ற நபர்களை பற்றிய விஷயங்களை கவனிக்கும், அரசின் அனைத்துத்துறைகளின் மற்றும் மற்ற அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ம ற்றும் மறு ஆய்வு செய்தல்.

          ஆ. ஊனமுற்ற நபர்களின் தொடர்பான விவகாரங்களை அணுக ஒரு மாநில கொள்கை உருவாக்குதல்.

            இ. ஊனற்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் வடிவு அமைப்பதில் மாநில அரசுக்கு அறிவுரைத்தல்.

          ஈ. நன்கொடையாளர் முகமைகளின் நிதிக் கொள்கைகள் அவை ஊனமுற்ற நபர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நோக்கமாகக் கொண்டு அவர்களுடன் ஆலோசித்து மறு ஆய்வு செய்தல்.

             உ. பொது இடங்கள், பணியிடங்கள், பொதுமக்கள் பயன்பாட்டு இடங்கள் பள்ளிகள், மற்றும் பிற நிறுவனங்களில் தடங்கலற்ற சூழ்நிலை சூழலை உறுதி செய்ய இன்ன பிற நடவடிக்கைகள் எடுத்தல்.

            ஊ. ஊனமுற்ற நபர்கள், சமத்துவம் மற்றும் முழு பங்கேற்பு அடைய வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்து கண்காணித்தல். 

             எ.  மாநில அரசால் வகுத்துரைக்கப்படும் இன்ன பிற பணிகளை மேற்கொள்ளுதல்.

பகுதி - 13 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3 - தொடரும்

No comments:

Post a Comment