இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

சீர்கேடு எற்பட்டது யாரால்? - பார்வையற்றோர் சங்கம் நேத்தியடி

கடந்த 30.06.2010ம் தேதிய துக்ளக் இதழில் என்.முருகன் என்ற ஓய்வு பெற்ற அவசர ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய கால்புணர்ச்சி கட்டுரைக்கு பதிலடியாக கோவையைச் சேர்ந்த பார்வையற்றவர்களின் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகியன தக்க பதிலளித்துள்ளன.

             30.06.2010 தேதியிட்ட "துக்ளக்" இதழில், "நிர்வாகச் சீர்கேடுகள்" என்றும் தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.  அது குறித்து சில கருத்துக்களை முன்வைப்பது எங்கள்  கடமையெனக் கருதுகிறோம்.

            அச்சுக் கூடத்தில் பார்வையற்றோர்கள் பலர் பணிபுரிந்து வந்ததாகவும், அதில் ஒரு பார்வையற்றவர் நான்கு பார்வையற்ற பெண்களை திருமணம் செய்திருந்ததாகவும், டஅவர் வேண்டாத செயல்களில் ஈடுபட்டு இறுதியில் கட்டுரையாளரால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

               இவர் எழுதியிருப்பதைப் படிப்பவர்களுக்கு, வார்வையற்றவர்கள் பாலுணர்வில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுவது போன்ற ஒரு கருத்தை ஏற்படுத்துகிறது.  பாலுணர்வு என்பது அனைவருக்கும் பொதவான ஒன்றுதான்.  இதில் பார்வையற்றவர்கள் மட்டும் தவறு செய்வது போல எடுத்துக்காட்ட முயலும் உள்நோக்கம்தான் நமக்குப் புரியவில்லை.   பணியாற்றிய பல பார்வையற்றவர்களில் ஒருவர்தான் அப்படி இருந்ததாக இவரே குறிப்பிடுகிறார்.  அப்படியானால், அந்த ஒருவரை முன்னிலைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் என்ன? எங்கோ ஒருவர் செய்வதை அனைவருக்கும் பொதுமைப்படுத்தி விட முடியுமா?.

               இரண்டாவது முறை உண்ணாவிரதம் இருந்து வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள் - பார்வையற்றவர்கள் அல்லர்.  கை, கால்கள், ஊனமுற்றவர்கள்.  உண்மையில் நடந்தது இதுதான்.  2004 முதல் 2008 வரை பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சிக் கூடத்தில், 25 பார்வையற்றவர்களும் 25 ஊனமுற்றவர்களும்  பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.  2008 முதல் ஊனமுற்றவர்கள் மடடுமே பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.  ஆக மொத்தம் இதில் பயிற்சி பெற்றவர்கள் 100 பார்வையற்றவர்கள் மட்டுமே.  பார்வையற்றோர் பள்ளியில் பயிற்சிக் கூடம் இருந்ததால், அங்கு பயிற்சி பெற்ற அனைவரும் பார்வையற்றவர்கள் என்று கட்டுரையாளர் முடிவுக்கு வந்துவிட்டார்.  

             மூன்று விழுக்காடு ஒதுக்கீடு புதிய நடைமுறை என்பதாகக் கட்டுரையாளர் கருதுவதும் தவறு.  1981ம் ஆண்டை ஐ.நா. சபை உடல் ஊனமுற்றோர் ஆண்டு என அறிவித்தபோது, இந்த மூன்று விழுக்காடு திட்டத்தை இந்தியா ஏற்றுக் காண்டது. அப்போது நடந்தவை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  PWD 1995 ஊனமுற்றோர் சிறப்பு சட்டம், 1996ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிறகு. இம்மூன்று விழுக்காடு உறுதிப்படுத்தப்பட்டது.  தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சில ஆண்டுகளாகவே ஆசிரியப் பணியில் இரண்டு விழுக்காடு பார்வையற்றவர்களுக்கும், 1 விழுக்காடு உடல் ஊனமுற்றோர்க்கும் தரப்பட்ட வுருகிறது.  அரசு அலுவலகங்களில் ஏழுத்தர் பணி போன்றவற்றுக்கு, காதுகேளாத, வாய் பேசாதவர்களை அமர்த்திவிட்டு, அந்த ஒரு விழுக்காட்டை ஆசிரியப் பணியில் பார்வையற்றவர்களுக்குத் தருகிறார்கள்.

              எல்லா பணிகளையும் பார்வையற்றவர்களால் செய்ய இயலாது என்று கூறும் கட்டுரையாளரின் கருத்து புதிய செய்தி அல்ல.  1998-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட Ms99 அரசாணையின் சேர்க்கையில் (Annexure - II) என்னென்ன பணி ஊனமுற்றவர்களால் செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டு பட்டியல் தரப்பட்டுள்ளது.  மத்திய அரசும்  A,B,C,D என்ற நான்கு குழுவிலும் ஊனமுற்றவர்கள் செய்யக் கூடிய பணிகளை அடையாளப்படுத்தி இருக்கிறது.  இந்த அடிப்படையில் தான் இப்போதெல்லாம் ஊனமுற்றவர்களும், பார்வையற்றவர்களும்  ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி பெற்றிபெற்று வருகிறார்கள்.

              பார்வையற்றவர்களுக்குப் பணிஅளித்ததால் தான் நிர்வாகச் சீர்கேடு வந்திருப்பதாகக் கட்டுரையாளர் கூறுவது, அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். 

               கடந்த 60 ஆண்டுகளில் கைதாகியிருக்கிற அல்லது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்ற கேத்தன் தேசாய் உட்பட எல்லோரும் ஊனமுற்றவர்கள் அல்லது பார்வையற்றவர்கள் தானா?  சம்பளத்திற்கு அப்பால் கிம்பளம் பெற்ற அனைவரும் பார்வையற்றவர்கள் அல்லது  உனமுற்றவர்கள் தானா? எனவே, நிர்வாகச் சீர்கேடு பார்வையற்றவர்களையோ ஊனமுற்றவர்களையோ வேலையில் அமர்த்தியதால் ஏற்படவில்லை. பார்வையுள்ள உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்குகின்ற அதிகாரிகளாலும், பிறராலும்தான் சீர்கேடு ஏற்பட்டிருக்கின்றன என்பதை கடு:டுரையாளர் தன் மனச்சான்றை கேட்டுப் பார்த்து ஒப்புக்கொள்ள வேண்டும்.

- ஆர்.  சீனிவாசன்.
தலைவர்,
பார்வையற்றவர்களின் உரிமைகளுக்கான சங்கம்,
கோயம்புத்தூர் - 641 015.


ஒரு சதவீதம் - நிறைவு செய்யப்படவில்லை

            உடல் ஊனமுற்றோருக்கான சிறப்புச் சட்டம் 1995 - ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது முதல். பார்வையற்றவர்களுக்கான பணி வாய்ப்பு இடங்கள் இதுவரை ஓரளவுகூட நிரப்பப்படவில்லை.  மாண்புமிகு தமிழக முதல்வர் அவல்கள் உடல் ஊனமுற்றோருக்குப் பணி வாய்ப்பு கொடுப்பது என்பது புடதியதன்று.  இதற்கு முன்பும் பலமுறை உடல் ஊனமுற்றவர்களுக்கு (பார்வையற்றவர்களுக்கு) பணி வாய்ப்பு அளித்துள்ளார். இருப்பினும் பார்வையற்றோருக்கான முறையான பணி இடஒதுக்கீடு ஒரு சதவிகித அடிப்படையில், நிறைவு செய்யப்படவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.  மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமன்று. வேறு சில மாநிலங்களிலும் உள்ளதென்பது இங்கு நோக்கத்தக்கது.
-  பொதுச்செயலாளர்,
தேசிய பார்வையற்றோர் இணையம்,
தமிழ்நாடு கிளை,
சென்னை - 600 070.
நன்றி: துக்ளக் 

               இவ்வளவு அவசரகதியில் எதனையும் தெரிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்துகொள்ள விருப்பப்படாமல் யார்மேலோ உள்ள கால்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ள இப்படி கேவலமாக கட்டுரைஎழுதும் இவர்போன்ற வர்களை கண்டித்தால் மட்டும் போதாது.  கடந்த இரண்டு வாரங்களாக அவரது கட்டுரையைப் பற்றிய எதிர்ப்புக்கட்டுரைகளை வெளியிட்டதன் மூலம் துக்ளக் பத்திரிக்கை நடுநிலையுடன் நடந்துகொண்டாலும், என்.முருகன் போன்ற அரைவேக்காடுகளை தொடர்ந்து கட்டுரை எழுத அனுமதிப்பது, துக்ளக் மற்றும் அதன் ஆசிரியர் உயர்திரு.சோ. அவர்களின் நம்பகத்தன்மையை மக்களை மறுபரிசீலனை செய்யவைக்கும். என்பதே எனது கருத்து.

No comments:

Post a Comment