இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

நிர்ணயித்த இலக்கை தாண்டியது மாற்றுத்திறனாளி பள்ளி சேர்க்கை

                  திருச்சி: ""தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துள்ளது,'' என்று கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளவிபரம் தெரிவிக்கிறது.

                      அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5,109 பேர் இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கிராம செவிலியர்கள், மறுவாழ்வுத்திட்ட அலுவலர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 319 மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, எஸ்.எஸ்.ஏ., சார்பில் மொத்தம் 5,235 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை தொடரும் பணியில் மேலும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். மனநிலை பாதிக்கப்பட்ட மாணவரை, சாதாரண மாணவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க முடியாது. சிறப்புப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment