இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்புகள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:
கல்வித் தகுதி :  குறைந்தது 10 வகுப்பு தேர்ச்சி
வயது                 :  குறைந்தது 21 (01.07.2010 அன்று) அதிகபட்சம் 40வயது
ஊனத்தின் சதவீதம் : 40 முதல் 50க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணத்திலிருந்து முழு விலக்களிக்கப்படுகிறது. (வருமான உச்சவரம்பின்றி)

(கீழ்காணும் பத்திரிக்கைச் செய்தியை படிக்க இருமுறை சொடுக்கி தனிப்பக்கத்தில் வரும்பொது தங்களது கணிணியில் சேமித்து, பின் பெரிதாக்கி படிக்கவும். குறிப்பு: மைக்ரோசாப்ட் ஆபீஸ் பிச்சர் மேனேசரில் படித்தால் தெளிவாக இருக்கும்)

No comments:

Post a Comment