ஊனங்கள் ஆரம்ப காலத்திலேயே அறியப்படல், மற்றும் தடுக்கப்படல் தக்க அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊனங்கள் ஏற்படுவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுத்தல்
பிரிவு:25. ஊனங்கள் ஏற்படுவதை தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு தக்க அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தன் பொருளாதார ஏற்றத்துக்கும், திறனுக்கும் ஏற்ப:-
அ. ஊனங்கள் ஏற்படுவதன் காரணங்கள் சம்பந்தமான ஆய்வு, புலனாய்வு மற்றும் கணக்கெடுத்தல் இவற்றை மேற்கொள்ளல், அல்லது மேற்கொள்ளப்பட காரணமாதல்.
ஆ. ஊனங்களைத் தடுக்கும் பல்வேறு முறைகளுக்கு ஏற்றம் அளித்தல்.
இ. "ஏது நிலை" நபர்களை கண்டறியும் நோக்கத்தில் குறைந்த பட்சம் ஆண்டிற்கு ஒரு முறையாவது எல்லா குழந்தைகளையும் பிரித்தாய்தல்.
ஈ. ஆரம்ப சுகாதார மையப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க வசதி செய்தல் மற்றும் பொது சுகாதாரம், ஆரோக்கியம், துப்புரவும் பற்றிய செய்திகளைப் புகட்டுதல் அல்லது புகட்டக் காரணமாதல்.
உ. தகவலறிவு பரப்புரைகளை சுவீகரித்தல் அல்லது சுவீகரிக்கப்பட காரணமாதல் மற்றும் பொது சுகாதாரம், ஆரொக்கியம், துப்புறவு பற்றிய செய்திகளைப் புகட்டுதல் அல்லது புகட்டக் காரணமாதல்.
ஊ. பிரசவத்துக்கு முன்னும், பிரசவத்தையொட்டிய சமயங்களிலும், பிரசவத்திற்கு பின்னும் தாய் சேய் பராமரிப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.
எ. பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் கிராம நிலைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கற்பித்தல்.
ஏ. ஊனத்துக்கான காரணங்கள் தடுப்பு முறைகள் பற்றி வானொலி, தொலைக் காட்சி மற்றும் பிற தகவலறிவிப்பு சாதனங்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை தொற்றுவித்தல் முதலிய பணிகளைச் செய்யலாம்.
பகுதி - 15 - சட்டம் 1995 - அத்தியாயம் - 5 - தொடரும்
No comments:
Post a Comment