இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு

             கடலூர்:சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத்திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில்,  10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரிய வந்தது. 


                  அவரது உடையில் அரசு காது கேளாதோர் பள்ளி, தஞ்சாவூர் என எழுதப்பட்டிருந்தது.இதே போன்று கடலூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த 6 வயது சிறுமியை புறக்காவல் நிலைய போலீசார் விசாரித்ததில், மூளை வளர்ச்சி இல்லாதவர் என தெரியவந்தது.மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் கடலூர் மற்றும் சிதம்பரம் போலீசார், கடலூரிலுள்ள இந்திய குழந்தைகள் நலச்சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஆலோசகர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்

No comments:

Post a Comment