22 ஜீலை 2010ம் தேதிய புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.
பார்வைத் திறனற்ற குழந்தைகள் பாதையில் ஒளி விளக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி. பெயர் விழிவழங்கி. இதனைக் கண்டுபிடித்திருப்பவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகக் கணிணிப் பேராசிரியை அமுதா. இதன் செயல்பாடுகளை அவரே விளக்குகிறார்.
"இது பார்வையற்ற குழந்தைகளுக்கான கருவி. இந்தக் கருவி தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் அல்ட்ராசொனிக் (ultrasonic) சென்சார் மூலம் இயங்குகிறது. ஆங்கிலத்தில் (predator) - future path finding device என்றும் அழைக்கப்படும் இந்தக் கருவி மூன்று பகுதிகாளகப் பிரிக்கப்பட்டுள்ளது. முறையே குழந்தைக் கருவி (child module), அடிநிலையம் (base station), சேவையகம் (data base server) மற்றும் பெற்றோர் கருவி (parents module cell phone).
Child module கருவியில் பல இணைப்புகளுடன் செக்பி, அல்ட்ரசோனிக் சென்சார், ஒரு ஹெட் செட், G.P.R.S. கருவி போன்றவை பொருத்தப்பட்டு ஒரு பெல்ட் வடிவில் உள்ளது. இதனைக் குழந்தையின் இடுப்பில் கட்டிவிட வேண்டும். பெல்டில் உள்ள சென்சார் கருவிகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் 5 மீட்டர் சுற்றளவிற்கு கண்காணிக்கும். குழந்தை செல்லும் வழியில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதை சென்ஸ் செய்து ஹெட் மூலம் குழந்தைக்கு அறிவுறுத்தும், அதுவும் தூய தமிழில். உதாரணமாகக் குழந்தைக்கு முன் பக்கம் தடை ஏற்படு:டு இடது பக்கம் தடை இல்லாமல் இருந்தால் "முன்பக்கம் தடை உள்ளது, இடது பக்கமாகத் திரும்பி முன்னேறிச் செல்லவும்' என்று தமிழில் தகவல் தரும். இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இடிநிலையம், சேவையகக் கருவிகள் பார்வையற்ற குழந்தையின் வீட்டில் அல்லது பள்ளியில் நிறுவவேண்டும். அதில் குழந்தையைப் பற்றிய தகவல்கள் முழுவதும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அடுத்து பெற்றோர் கருவி (cell phone).
இந்த மூன்று கருவிகளும் G.P.R.S. இணைப்பின் மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி முறையில் அடிநிலையம், சேவையகக் கருவிகள் முழந்தையின் செயல்பாடுகளைக் கண்காணித்து பெற்றொருக்குத் தானாகவே தமிழில் குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.
இந்தக் கருவி பெர்ருத்தப்பட்ட இரு குழந்தைகள் தங்களுக்குள் தொடர்புகொள்ள முடியும். இந்தக் கருவி G.P.R.S.இணைப்பு இல்லாமலும் சிறப்பாகச் செயல்படும். என்று இதன் சிறப்புகளை அடுக்கிய போராசிரியை அமுதா, "இந்தக் கருவி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ அவர்களின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்கிறார் நெகிழ்ச்சியாக.
நன்றி: புதிய தலைமுறை
பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதமான இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய உதவிப் பேராசிரியை அமுதாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment