இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

பகுதி - 13 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3


மாநில செயற்குழு
பி.19.து.பி.1. இச்சட்டத்தின் கீழ் தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள மாநில செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை மாநில அரசு நிறுவ வேண்டும்.
து.பி.2. மாநில செயற்குழுவில் அடங்கி உள்ளவர்கள்:-

            அ. சமூக நலத்துறை செயலர் வகிக்கும் பதவியால் தலைவர்.

            ஆ. ஆணையர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.

          இ. மாநில அரசில் இணைச் செயலருக்கு குறையாத அந்தஸ்த்தில் ஒன்பது நபர்கள், சுகாதாரம், நிதி, கிராமப்புற வளர்ச்சி, கல்வி, நலவாழ்வு பணியாளர் மற்றும் மக்கள் குறை, நகர்ப்புற விவகாரம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகள் பிரதிநிதித்துவம் பெற நியமிக்கப்படுவர்.  இவர்கள் வகிக்கும் பதவியால் உறுப்பினர்கள்.

            ஈ. மாநில அரசால் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கருதப்படும் விஷயங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மாநில அரசால் ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும்.  இவர் உறுப்பினர்.

            உ.  இயன்றவரை 5 நபர்கள், ஊனமுற்ற நபர்களாக ஊனங்களின் பால் அக்கரை கொண்ட, அரசு சாரா ஸ்தாபனங்கள் மற்றும் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒவ்வொருவகை ஊனத்திற்கும் ஒருவர் வீதம் மாநில அரசால் நியமிக்கப்படவேண்டும். இவர்கள் உறுப்பினர்கள் இந்நிலையில் மாநில அரசு இவ்விதியின் கீழ் நபர்களை நியமிக்கும்போது குறைந்தபட்சம் ஒருவர் பெண்ணாகவும், ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

            ஊ. நலவாழ்வு துறையில் ஊனங்கள் பகுதியை கவனிக்கும் இணைச் செயலாளர், வகிக்கும் பதவியால் உறுப்பினர் செயலர்.

து.பி.2. விதி(ஈ) மற்றும், விதி(ஊ)ன் படி நியமிக்கப்படும் உறுப்பினர்கள், மாநில அரசுகள் வகுத்துரைக்க உள்ள படிகளைப் பெறுவர்.

து.பி.4. து.பி.2. விதி "ஈ" அல்லது விதி "உ" கீழ் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் தன் கைப்பட மாநில அரசுக்கு எழுதி தனது பதவியை ராஜினாமா செய்யலாம்.  அவ்வமையம் அவரது பதவியிடம் காலியாகிவிடும்.

மாநில செயற்குழுவின் பணிகள்
பிரிவு:20. து.பி.1. மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்ட செயல்பாட்டு அங்கமாக மாநில செயற்குழு விளங்கும்.
து.பி.2.து.பி.1.க்கு முரண்படா வகையில் மாநில ஒருங்கிணைப்புக்குழுவால் தன்னிடம் ஒப்படைக்கப்படும்  இன்ன பிற பணிகளையும் மாநில செயற்குழு மேற்கொள்ளும்.

மாநில செயற்குழுவின் கூட்டங்கள்
பிரிவு:21. மாநில செயற்குழு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி. மாநில அரசால் வகுத்துரைக்கப்பட உள்ள செயல்முறை விதிகளை அனுசரித்தே தனது கூட்டங்களில் அலுவல்களை மேற்கொள்ளும். 

குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மாநில செயற்குழு
தற்காலிகமாக நபர்களை சேர்த்துக்கொள்ளல்
பிரிவு:22.
து.பி.1. மாநில செயற்குழு, இச்சட்டத்தின் கீழ் மாநில அரசு வகுத்துரைக்க முறையிலும், நோக்கங்களுக்காகவும் தேவைப்படும் அறிவுரை மற்றும் உதவிக்காக எந்த நபரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

து.பி.2. து.பி.1ன் கீழ் ஏதாவது ஒரு நோக்கத்துக்காக மாநில செயற்குழு உடன் சேர்க்கப்படும் நபர். அந்த நோக்கம் தொடர்பாக குழுக் கூட்டத்தில் விவாதத்தில் பங்கேற்கும் உரிமைப் பெறுவார்.  ஆனால், கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லை.  அத்துடன் வேறு எந்த நோக்கத்துக்காகவும் குழு உறுப்பினர் ஆகமாட்டார்.

து.பி.3. து.பி.1ன் கீழ் மாநில செயற்குழுவுடன் ஏதேனும் ஒரு நோக்கத்துக்காக சேர்க்கப்பட்ட நபர், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், குழுவின் வேறு பணியில் கலந்து கொள்வதற்காகவு், மாநில அரசு வகுத்துள்ள கட்டணங்கள் மற்றும் படிகள் பெறுவார். 
 
பணிப்புரை வழங்கும் அதிகாரம்
பிரிவு:23. இச்சட்டத்தின் கீழ் பணிகள் ஆற்றுவதில்:-

அ. மத்திய ஒருங்கிணைப்புக் குழு மத்திய அரசு எழுத்துமூலம் அளிக்கும் பணிப்புரைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.  மேலும் 

ஆ. மாநில செயற்குழு, மத்திய ஒருங்கிணைப்பு குழு மாநில அரசு ஆகியன எழுத்துடமூலம் அளிக்கும் பணிப்புரைகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்நிலையில், மாநில அரசின் பணிப்புரை மத்திய ஒருங்கிணைப்பு குழு அளித்துள்ள பணிப்புரைகளோடு வேறுபட்டால் அவ்விஷயம் மத்திய அரசுக்கு குறித்து அனுப்பப்பட வேண்டும். இதுவே இறுதியான தீர்மானமாகும்.

காலியிடங்கள் செயல்முறைகளை செயல்லுபடியாக்கா 
பிரிவு:24 மத்திய ஒருங்கிணைப்பக் குழு, மத்திய செயற்குழு, மாநில ஒருங்கிணைப்புக் குழு, மாநில செயற்குழு  ஆகியவற்றின் நடவடிக்கைகள், அல்லது செயல்முறைகள் மேற்படி குழுக்களில் காலியிடம் உள்ளது என்பதற்காகவோ, குழு உருவாக்களில் குறைபாடு உள்ளது என்பதற்காகவோ, மட்டும் செல்லுபடியாகாமல: போகா.

 பகுதி - 14 - சட்டம் 1995 - அத்தியாயம் - 4 - தொடரும்

No comments:

Post a Comment