கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
பள்ளிகளுக்கு செல்ல ஏதுவான மாற்றுத் திறனாளி குழந்தைகளை, வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சிறப்பு பள்ளி அனுமதி தேவைப்படுவோரை, அதற்கான பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.கடுமையான பாதிப் புள்ள குழந்தைகளுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று கல்வி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பதன் அவசியத்தை படிப்பறிவு இல்லாத, பின்தங்கிய மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் உள்ள பெற்றோர் களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: ஒட்டந்சத்திரம்.இன்
No comments:
Post a Comment