கடந்த 30.06.2009 வரை மாற்றுத்திறனுடையோராகிய நாம் இரயிலில் பயணம் செய்ய எட்டுபேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இணைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் சாதாரண பயணச்சீட்டுடன் பயணம் செய்யும் வசதியிருந்தது.
ஆனால் 01.07.2009 முதல் அந்த சிறப்புப் பெட்டி முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டது. அதில் மாற்றுத்திறனுடையோர் முன்பதிவு செய்தே பயணம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
அந்த சிறப்புப் பெட்டியினை முன்பிருந்தது போன்றே முன்பதிவற்ற சாதாரண பெட்டியாக மாற்ற நமது சங்கத்தாலும் பலவித அமைப்புகளாலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அது இறுதியில் சாகும்வரை உண்ணாவிரதமாக கடந்த மே மாதம் சென்னையில் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் நமது தமிழக முதல்வர் கலைஞர் இரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு கடிதம் எழுதுவதாக கூறி உண்ணாவிரதத்தினை கைவிடக் கோறியதற்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
அதன்படி தமிழக முதல்வரின் கடிதத்திற்கிணங்க கடந்த மே 22ம் தேதி இரயில்வே அமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் "முழுவதும் முன்பதிவுடன் டஇயங்கும் ரயில்கள் அல்லாத மற்ற அமைத்து மெயில், விரைவு ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வடிவமைப:புடன் கூடிய பெட்டிகள் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான பெட்டிகளாக இணைக்கப்படும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு ரயில் பெட்டிகளில் முன்பு போலவே 2 இருக்கைகள் மாற்றுத் திறனாளிகளுக்க ஒதுக்கீடு செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி 30.06.2010ம் தேதிய தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளது.
எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவருவதற்கு முன்னர் அந்த மாற்றம் சம்மந்தப்பட்ட துறையிடமோ அல்லத அமைப்பிடமோ கலந்தாலோசித்து நிறைவேற்றுவதுதான் வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் அனைத்தும் தலைகீழ். திருத்திக்கொண்டவரை சரிதான்.
ReplyDelete