அத்தியாயம் - 2
மத்திய ஒருங்கிணைப்பு குழு
3.
1) மத்திய அரசு, அறிவிக்கையின் மூலம் "மத்திய ஒருங்கிணைப்பு குழு" ஒரு அமைப்பை நிறுவி, இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளவும், செய்யவும் வேண்டும்.
2) மத்திய ஒருங்கிணைப்பு குழுவிடம் இடம் பெறுபவர்கள்:-
அ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வகிக்கும் பதவியால் தலைவர்.
ஆ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சர், வகிக்கும் பதவியால் துணைத் தலைவர்,
இ) இந்திய அரசாங்கத்தில் நல்வாழ்வு கல்வி மகளிர் மற்றும் குழந்தைகள் மன்னேற்றம், செலவீனம், அலுவலர்கள், பயிற்சி மட்டும் பொது மக்கள் துறைகள், சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, தொழில் வளர்ச்சி நகர்புற விவகாரங்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, சட்ட விவகாரங்கள், பொதுத்துறை முனைவகங்கள் ஆகிய துறைகளின் செயலாளர்கள் வகிக்கும் பதவியால் உறுப்பினர்கள்.
ஈ) முதன்மை ஆணையர், வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
உ) தலைவர், இரயில்வே வாரியம் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
ஊ) தலைமை இயக்குனர் உழைப்பு பயிற்சி மற்றும் பணிவாய்ப்பு வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
எ) இயக்குனர் தேசிய கழுமம் கல்வி ஆராய்ச்சி மயிற்சி வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
ஏ) மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் மாநிலங்களவையால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒருவர் உறுப்பினர்.
ஐ) பின்வரும் இயக்குனர்கள் : -
1. கண்பார்வை இழந்தவர்களுக்கான தேசிய கழகம் டோராடூன்.
2. மனநிலை ஊனமுற்றோருக்கான தேசிய கழகம் செகந்திராபாத்
3. கை, கால் ஊனமுற்றோருக்கான தேசிய கழகம் கல்கத்தா
4. காது கேளாதவர்களுக்கான அலியாவர்ஜன் தேசிய கழகம் பம்பாய்
வகிக்கும் பதவியால் உறுப்பினர்கள்
ஒ) மத்திய அரசால் நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். மாநிங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மத்திய அரசு, பொருத்தம் என கருதும் ஏற்பாட்டின்படி சுழற்சி முறையில் மையும். எனினும் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் அரசுடைய பரிந்துரையின் பேரில் அல்லாமல் இந்த பிரிவின் கீழ் நியமனமும் செய்ய முடியாது.
ஒள) அரசு சாரா ஸ்தாபனங்கள் மற்றும் சங்கங்கள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் கூடியவரை 5 பேர், ஊனமுற்ற நபர்களாக, ஊனங்களின் பால் அக்கரையுள்ளவர்களாக, ஒவ்வொரு ஊனத்திற்கும் ஒருவர் வீதம், மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் உறுப்பினர்கள். இந்நிலையில் இப்பிரிவின் கீழ் நியமனங்கள் செய்யும்போது, மத்திய அரசு ஒரு பெண் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியை அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு நபரை நியமிக்க குறைந்த பட்சம் நியமிக்க வேண்டும்.
3) இணைச் செயலர், இந்திய அரசு அரசு நலவாழ்வு அமைச்சகம், ஊனமுற்றோர் நலன் கவனிப்பவர் வகிக்கும் பதவியால் உறுப்பினர் செயலர்.
4) மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பதவி, வகிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலோ (எந்த அவையிலும்) அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டாலோ அத தகுதியிழப்பு ஆகாது.
No comments:
Post a Comment