இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

பகுதி - 8 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகல்

6. மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஒருவர், பிரிவு ஐந்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியிழப்பிற்கு ஆட்பட்டால் அவரது பதவி காலியாகிவிடும்
மத்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

7. மத்திய ஒருங்கிணைப்பு குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி மத்திய அரசு வகுத்துள்ளபடி, தனது கூட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக செயல்முறை ளவிதிகளை பின்பற்ற வேண்டும்.
மத்திய ஒருங்கிணைப்பு குழுவின் பணிகள்
1) இச்சட்டத்தில் விழ வகைக்கேற்ப, மத்திய ஒருங்கிணைப்பு குழுவின் பணி, ஊனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு தேசிய குவியப் புள்ளியாக கடமையாற்றி ஊனமற்ற நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்வை நோக்கிய விரிவான கொள்கை, தொடர்ந்து பரினமிக்க வழி செய்யவேண்டும்.
2) குறிபாபாகவும், முன்சொன்னதன் பொதுமை தன்மைக்கு முரண்படாமலும், மத்திய ஒருங்கிணைபக்பு குழு, பின்வரும் அனைத்து பணிகளையுமோ, அல்லது ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். அவை,
          அ) ஊனமுற்ற நபர்கள் பற்றிய விஷயங்களை கவனிக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்த,  அரசு சாராத ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளை மறு ஆய்வு னசெய்தல் ஒருங்கிணைத்தல்.

            ஆ) ஊனமுற்ற நபர்களால் எதிர்கொள்ளப்படும் விஷயங்களை அணுக ஒரு தேசிய கொள்கை உருவாக்குதல்.

           இ) ஊனங்கள் பற்றிய கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் மற்றம் திட்டப் பணிகள் விடவமைப்பதில் மத்திய அரசுக்கு அறிவுரைத்தல்.

          ஈ) ஊனமுற்ற நபர்கள் விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களுக்கு எடுத்துச் சென்று, தேசிய திட்டத்திலும் சர்வதேச முகமைகள் ஊனமுற்றவர்களுக்காக உருவாக்கம் கொள்கைகள் மற்றும் திட்டங்களிலும் ஊனமுற்ற நபர்களுக்கான திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகள் இடம்பெற செய்தல்.

            உ) நன்கொடையாளர் மகமைகளின் நிதியளிப்பு கொள்கைகள் ஊனமுற்ற நபர்கள் பால் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கலந்து ஆலோசித்து மறு ஆய்வு செய்தல்.

              ஊ) பொது இடங்கள், பணியாற்றும் இடங்கள், பொது மக்கள் பயன்பாட்டு இடங்கள், பள்ளிகள், மற்றம் இதர ஸ்தாபனங்களால் தடங்கலற்ற சூழலை உறுதி செய்ய இன்னபிற நடவடிக்கைகள் எடுத்தல்.

              எ) ஊனமுற்ற நபர்களின் சமத்துவத்திற்கு ஆகவும் முழு பங்கேற்பினை அடைய வடிவமைக்கப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்தல்.

               ஏ) மத்திய அரசால் குறித்துரைக்கப்படும் இன்ன பிற பணிகளை மேற்கொள்ளல்.

No comments:

Post a Comment