இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

பகுதி - 7 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
உறுப்பினர் பதவிக்காலம்

4.            1)  இச்சட்டத்தின் கீழ், அல்லது இச்சட்டத்தின்படி, டவேறு விதமாக அளிக்கப்பட்டாலன்றி, மத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு, பிரிவு மூன்று துணைப்பிரிவு இரண்டு உட்பிரிவு ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்படுவர்,  நியமனத் தேதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.

                அத்துடன் இவ்வுறுப்பினர், தம் பதவிக்காலம் முடிந்துவிட்ட டபோதிலும் தனது பின்வர் அப்பதவிக்கு வரும்வரை பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

                2) வகிக்கும் பதவியால் பதவிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலம் தாம் இப்பதவிக்கும் நியமிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த பதவியில் இராவிட்டால் முடிவுக்கு வந்துவிடும்.

                 3) மத்திய அரசு, மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக பிரிவு மூன்று துணபை்பிரிவு இரண்டு விதி ஒன்று அல்லது எல் படி நியமித்த ஒருவரை அரவது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஏற்றது என கருதினால் போதிய அவகாசம் கொடுத்தபின் காரணம் கூறி நீக்கிவிடலாம்.

                 4) பிரிவு மூன்று துணைப்பிரிவு இரண்டு விதி ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்பட்ட உறுப்பினர் எந்த நேரத்திலும் தனது பதவியை இராஜினாமா செய்யலாம்.  அதனை தன் கைப்பட எழுதி மத்திய அரசுப்பு அறிவித்து விட்டால், அவ்வமையம் அவரது பதவி இடம் காலியாகி விடும்.

                5) மத்திய ஒருங்கிணைப்பு குழுவில் ஒரு புது மியமளத்தால் ஒரு காலி இடம் தற்காலிகமாக நிரப்பப்படலாம். இவ்வாறு நியமிக்கப்படும் நபர் எந்த உறுப்பினருடைய இடத்தில் நியமிக்கப்பட்டாலோ அவரது மீதியுள்ள காலத்திற்கு மடடுமே இப்பதவியை வகிக்கலாம்.

                6) பிரிவு மூன்று துணைப்பிரிவு இரண்டம் விதி ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்படும் ஒரு உறுப்பினர் மறு நியமனத்திற்கு தகுதியானவர்.

               7) பிரிவு மூன்று துணைப் பிரிவு இரண்டு விதி ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்படும் உறுப்பினர்கள், மத்திய அரசால் இவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் படிகளை பெறுபவர்.

தகுதி இழப்புகள்
5.
1) மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக இருக்க குறைபாடுகள் உள்ளவர்கள் தகுதியற்றவர்கள் : -

எவரேனும் ஒருவர் :
           அ) இப்போதே, எப்போதாவதோ, திவாலானதாக நீதிமன்றத்தால் தீர்ப்பு பெற்றவர் கடன்காரர்களுக்கு பணத்தை திருப்பி வைத்தவர் கடனாளிகளிடம் சிக்கல் உருவாக்கி கொண்டவர் அல்லது,
    
           ஆ) சரியான மனநிலையில் இல்லாதவர் அன்றி அவ்வாறு உள்ளவராக அதிகாரம்  பெற்ற நீதிமன்றத்ததால் தீர்ப்பு அளிக்கப்பெற்றவர் அல்லது.

           இ) மத்திய அரசின் அபிப்பிராயப்படி மனக் கீழ்மை உள்ளவர் என கருதும் அளவு குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் அப்படிப்பட்டவர் அல்லது.

            ஈ) இன்றாவது அல்லது என்றாவது இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் அப்படிப்பட்டவர் அல்லது.

              உ)   1) மத்திய ஒருங்கிணைப்பு குழுவில் அவர் தொடர்ந்து உறுப்பினராக இருப்பது, பொது மக்களின் கஅபிலாஷைகளுக்கு தீமை பயப்பது என மத்திய அரசு ளனகருதும் அளவுக்கு தனது உறுப்பினர் பதவியை துஷ்பிரயோகம் செய்திருந்தால்,
                        
                         2) மத்திய அரசால் எந்த உறப்பினருக்கும், விளக்கம் தர போதிய வாய்ப்பு அளிக்காமல் நிக்கல் ஆணை பிறப்பிக்கப்பட கூடாது.

                         3) பிரிவு நான்கு துணைப்பிரிவு ஒன்று மற்றம் துணைப்பிரிவு ஆறில் அடங்கியுள்ள போதிலும் இப்பிரிவின் கீழ் நீக்கப்பட்ட ஒருவர் உறுப்பினராக மறு நியமனத்திற்கு தகுதியற்றவர்.


பகுதி - 8 - தொடரும்.

No comments:

Post a Comment