இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

2010 - சூன் மாத மாதாந்திர கூட்டம்

நமது சங்கத்தின் சூன் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம் வழக்கமான இடமான திருச்சி, மரக்கடை சையது முர்துஷா பள்ளியில் காலை 10மணிக்கு நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் செயலாளர் - மாரிக்கண்ணன், பொருளாளர் - வெங்கட்ராமன், காப்பாளர் - பாலகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் - சுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் உறுப்பிளர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்திற்கு செயலாளர் - மாரிக்கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். 

கூட்டத்தின் முடிவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) எதிர்வரும் சூலை மாதம் மாற்றுத்திறனாள மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் என நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்குவது,

2) பேருந்து பயணத்தின்பொழுது மாற்றுத் திறனாளர்கள் நடத்துனர்களால் எதிர்கொள்ளும் துயரங்களை சம்மந்தப்பட்ட துறைக்கு துறை ரீதியான நடவடிக்கைக்காக அனுப்பிவைப்பது.

3) பேருந்துகளில் மாற்றுத்திறனாளர்கள் பாதுகாவளர்களுடன் பயணம் செய்ய வெளியிடப்பட்ட அரசாணை (நிலை)எண்:18 நாள்:31.05.2010-ல் குறிப்பிடப்பட்டுயள்ள "துணையாளரின் (பாதுகாவளரின்) துணையின்றி பயணம் செய்ய இயலாது என உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று" பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலைபாடு ஒரு செயலிற்று பலமுறை மருத்துவச்சான்று பெறுவது என்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதனை வளியுறுத்துவது எனவும்.

4) எதிர்வரும் 19.06.2010 அன்று சென்னையில் நடைபெறும் அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கக் கூட்டத்தில் நூற்றுக்கணக்காண மாற்றுத்திறனாளிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்டு கூட்டத்தினை சிறப்பிப்பது 

5) அடுத்த மாத மாதாந்திர கூட்டத்திற்கு முன்னர் மாற்றுத்திறனாளர்களுக்கான சுயஉதவிக் குழுக்களை அமைப்பது எனவும் அதற்காக அந்தந்த பகுதியைச்சார்ந்த மாற்றுத்திறனாளர்களை ஒருங்கிணைப்பது,

எனவும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் பொருளாளர் வெங்கட்ராமன் எழுதப்பட்ட தீர்மானங்களை அனைவருக்கும் படித்துக்காட்டி, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment