இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

பகுதி - 4 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

அத்தியாயம் - 1
பூர்வாங்கம்
சிறு தலைப்பு
அளவு மற்றும் ஆரம்பம்

1. 
1)  இச்சட்டம், ஊனமுற்ற நபர்களுக்கான (பராமரிப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழு பங்கேற்பு) சட்டம் 1995, என அழைக்கப்படுவதாக.

2) இந்தியா முழுமைக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இது விரியும்

3) மைய அரசு, அறிவிக்கையின் மூலம் நியமிக்கும் தேதியிலிருந்து இது அமுலக்கு வரும்.

இலக்கணங்கள்

2. 
 இச்சட்டத்தில், இடத்திற்கேற்ப வேறு வகையில் தேவைப்பட்டால் அன்றி  
(அ) "முறையான அரசு" என்பது

1) மைய அரசு தொடர்பான விதத்தில் அவ்வரசினால் முழுமையாகவோ பெருமளவிலோ நிதி பெறும் நிறுவனம் அல்லது,  1924-ம் ஆண்டன் பொரி மேடு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட பொரிமேடு வாரியம் மைய அரசு ஆகும்.

2) மாநில அரசு டதொடர்பான வகையில், அவ்வரசால் முழுமையாகவோ பெருமளவிற்கோ நிதி பெறும் ஒரு நிறுவனம் அல்லது, பொரிமேடு வாரியம் தவிர  ஏதெனும் ஒரு ஸ்தல அதிகார அமைப்பு, மாநில அரசு ஆகும்.

3) மத்திய ஒருங்கிணைப்பு குழு மற்றும் மத்திய செயற்குழுவை பொறுத்த மத்திய அரசு

4) மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில செயற்குழுவை பொறுத்தவரை, மாநில அரசு,

(ஆ) "பார்வையின்மை" என்பது, ஒரு நபர் பின்வரும் ஏதேனும் ஒரு நிலையில் துன்புறுவதை குறிக்கும், அவையாவன,

1) முழுவதும் பார்வையின்மை அல்லது,

2) திருத்தும் கண்ணாடிகளுடன் நன்றாக உள்ள கண்ணில் பார்வை கோணல் 6/60 அல்லது 20/200 (ஸ்நெல்லன்) அளவுக்கு மிகாமல் இருந்தால் அல்லது

3) பார்வை பரப்பு மட்டுப்பாடு 20 டிகிரி கோணத்திற்கு அல்லது அதைவிட மோசமாக சுருங்கினால்.

(இ) "மத்திய ஒருங்கிணைப்பு குழு" என்பது
                 பிரிவு மூன்று துணைப்பிரிவு ஒன்றின் கீழ் அமைக்கப்படும் மத்திய  ஒருங்கிணைப்பு  குழுவாகும்.


(ஈ) "மத்திய செயற்குழு" என்பது
                 பிரிவு ஒன்பது துணைப்பிரிவு ஒன்றின்படி அமைக்கப்படும் மத்திய செயற்குழுவாகும்.

(உ) "பெருமூளை முடக்கம்" என்பது
                     பிரசவத்திற்கு முன்பு, பிரசவச் சூழலில் அல்லது வளர்ச்சி அடையும் குழந்தை பருவத்தின் போது ஏற்படும் மூளை காயங்கள் அல்லது பாதிப்புகளின் விளைவாக தோன்றும் அசாதாரண இயக்கக் கட்டுப்பாட்டு நிலையால் சுட்டப்படும் ஒரு நபரிடம் உள்ள, வளர்ச்சியற்ற நிலைமை தொகுப்பாகும்.

(ஊ) "முதன்மை ஆணையர்" என்பவர் "பிரிவு 57 துணைப்பிரிவு ஒன்றின்படி" நியமிக்கப்படும் முதன்மை ஆணையர் ஆவார்.

(எ) "ஆணையர்" என்பவர் பிரிவு 60 துணைப்பிரிவு ஒன்றின்படி நியமிக்கப்படும் ஆணையர் ஆவார்.

(ஏ) "உரிய அதிகார அமைப்பு" என்பது, பிரிவு 50-ன்படி நியமிக்கப்படும் அதிகாரி ஆவார். 

(ஐ) "ஊனம்" என்பது
          (1) பார்வையின்மை
          (2) மங்கிய பார்வை
          (3) தொழுநோய் குணமாக்கப்பட்டவர்
          (4) செவித்திறன் பழுது
          (5) தன்னியக்க ஊனம்
          (6) மனநலம் இழப்பு
          (7) மனநோய்

No comments:

Post a Comment