இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இனி பேருந்திலும் பாதுகாவலருடன் பயணம் செய்யலாம்

மாற்றுத்திறனுடையோர் இரயில் பயணத்தின்போது எப்படி பாதுகாவலருடன் பயணம் செய்கின்றனரோ, அதனைப்போன்று இனி பேருந்திலும் பயணம் செய்யலாம் - என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு 30-05-2010 அன்றைய தேதியில் அரசாணை வழங்கியுள்ளது. 

அதன்படி ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்குட்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் விருப்பம் போல பாதுகாவலருடனோ அல்லது தனித்தோ இனி பேருந்தில் பயணம் செய்யலாம்.

விதிமுறை:

இந்த திட்டம் அனைத்துவித மாற்றுத்திறனாளர்களுக்கும் பொருந்தாது.  
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, தனித்து பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பாதுகாவலருடன் பயணம் செய்ய முடியும்.

இதை உறுதி செய்ய உரிய மருத்துவரிடம் இதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

அரசாணையில் இதற்கென இடம்பெற்றுள்ள வாசகம்:

3) (iii) துணையாளரின் உதவியின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சலுகையினைப் பயன்படுத்தி அவருடன் துணையாளர் ஒருவரை அழைத்துச் செல்ல விரும்பினால் அந்த மாற்றுத்திறனாளிகள் துளையாளரின் உதவியின்றி பயணம் செய்ய இயலாது என  உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அதன் நகல் ஒன்றினையும் நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையையும் பின்பற்ற வேண்டும்.

(iv) அரசாணை(நிலை) எண்.153, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள் 29.10.2008ல் வழங்கப்படுவது போன்றே மாற்றுத் திறனாளிகளுடன் செல்லும் துணையாளருக்கு வழங்கப்படும் 75% பயணக்கட்டனச் சலுகைக்கு செலவாகும் மொத்தத் தொகையையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையே ஈடு செய்யும்.

எனவும் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. 

 மற்ற சாராம்சங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அதாவது பயணத்தின் பொழுது 1) அடையாள அட்டையின் நகல், 2) அடையாள அட்டை அசல் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.  அடையாள அட்டை நகலினை நடத்துனரிடம் கொடுத்து நடத்துநர் எதிர்பார்க்கும் பட்சத்தில் அடையாள அட்டையின் அசல் நடத்துனரிடம் காண்பிக்கப்பட்டு யாதொரு பதிவுமின்றி திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

உள்ளுர் பேருந்து மற்றும் குளிர்சாதன பேருந்து தவிர அனைத்துப் பேருந்துகளிலும் (விரைவுப் பேருந்து, சிறப்புப் பேருந்து, இடைநில்லாப் பேருந்து போன்ற அனைத்துப் பேருந்துகளிலும்) பயணம் செய்யலாம். 

இதில் தங்களுக்கு எற்படும் இடையூகளை இந்த வலைப்பதிவில் தயவுசெய்து பதிவிடவும். அதற்கு தக்க தீர்வுகள் உங்களுக்கு வழங்கப்படும்.  பேருந்து பயணத்தின் போது இடையூறு ஏற்பட்டால் 1)தாங்கள் பேருந்தில் ஏறிய பேருந்து நிருத்தம், 2) அப்போதைய நேரம், 3) பேருந்து எங்கிருந்து எதுவரை செல்கிறது என்ற விவரம், 4) பேருந்து எண் மற்றும் 5) அந்த பேருந்து எந்த கோட்டத்தைச் சேர்ந்தது என்பன போன்ற விவரங்களை குறித்துக்கொண்டு  இந்த வலைதளத்தில் பதிவிடவும். உங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment