இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாநிலம் தழுவிய மாநாடு

  அர்ப்பணிப்பு உணர்வோடும், சேவை மனப்பாங்குடனும் அரசுப்பணியாற்றிவரும் ்மாற்றுத்திறனாளித் தோழர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!

          மாற்றுத்திறனாளிகளாகிய நாம், நமது பணியினை பிறரைப்போலவே திறம்படவும், பிறரைவிடப் பொறுப்புணர்வுடனும் அனைத்து சூழ்நிலைகளிலும் செவ்வனே செய்து வருகின்றோம். இருப்பினும் நமக்கென அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை நாம் முழுமையாகப் பெறுவதில் உள்ள சிக்கல்களை, நாமே முயன்று தீர்த்துக்கொள்ளும்
களத்தினை ஏற்படுத்தி தமிழ்நாட உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மூலம் அனைத்து அரசுப்பணி மாற்றத்திறனாளிகள் நலச்சங்கம் தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.

          2010 ஜனவரி 21ம் நாளன்று நமது தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல சிறப்ப திட்டங்களை விழா மேடையில் அறிவித்தார்கள்.  இதன் தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் அவர்கள் மூலமாக ஊடகங்களில் நாம் மகிழத்தக்க வகையில் அறிவிப்புகள் வெளிவந்துகொண்டிருந்தது.  இந்த நிலையில் 19-03-2010 ஆம் தேதியில் தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறன் மக்களுக்காக தனித் துறையே அறிவித்து அவர்களே அத்துறைக்கு பொறுப்பு ஏற்றுள்ளார்கள் என்பது நமக்கு மிக்க மகிழ்ச்சியான விஷயமாகும்.  இந்த நிலையில் அரசுப்பணியாளர் சேவையாளர்களுக்கான அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்க கடமையுள்ளது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

          மாற்றுத்திறன் படைத்த அரசுப் பணியாளர்களுக்கு "தேவைகளும் சேவைகளும்" என்ற தலைப்பினில் மாநிலம் தழுவிய மாநிட ஒன்றை கூடிய விரைவில் நடத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக....

1) நமது நலனுக்காக பல சிறப்புத்திட்டங்களை அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு துணைமுதல்வர் அவர்களுக்கும் நமது நன்றியையும் பாராட்டுக்களையும் காணிக்கையாக்குதல்.

2) ஏழை எளிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்குதல்.

3) நாம் பணிபுரியும் இடத்தில் பணியாற்றுவதற்கு இடையூரான, பிரச்சனைகளையும் மற்றும் புதிய சலுகைகளையும் அரசுக்கு எடுத்துச்சென்று சுயமதிப்புடன் நமத பணியைச் செய்திடும் சூழலை உருவாக்குதல் முதலிய சீரிய பணிகளை செய்திட அரசுப் பணி மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் திட்டமிட்டுள்ளது.

          இந்த மாநாட்டில் மாற்றுத்திறனாளர்களான நாம் அனைவரும் பெருவாரியாக கலந்துகொண்டு அனைத்துவகை மாற்றுத்திறனாளர்களிடமும் ஒற்றுமையை உருவாக்குவதன் மூலமும், ஓரணியாக திரள்வதன் மூலமும் நமது சமூக மாற்றத்திற்கு நமது பங்களிப்பை வழங்க முடியும்.

                        இந்த மாநாடு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை, தங்கள் குடும்பத்தினர்கள் நலன் மேலும் அவர்களை பாதுகாக்கும் இயக்கமாக மலர உள்ளதால் தங்களின் பங்களிப்பையும், நிதியுதவியையும் தவறாது வழங்கி அமைப்பை வழுப்படுத்துவதுடன்.  நமது ஒற்றுமையையும் வலிமையையும் பெறுக்கிடுவோம், பெறுமையடைவோம்.

மேலும் விவரங்களுக்கு:
மாநில பொருப்பாளர்கள்:
திரு.கே. சீனிவாசன்               மாநில தலைவர்                      சென்னை     9840433964
திரு.டீ. இராமசுவாமி             மாநில செயலாளர்                  சென்னை     9840489498
திரு.எஸ்.பூபதி                         மாநில துணைதலைவர்        மதுரை          9600450676
திரு.பி.அண்ணாதுரை          மாநில துணைதலைவர்        திட்டக்குடி   9443640132
பேரா.த.பொன்னுசாமி         மாநில பொதுச்செயலாளர்   சென்னை     9600193366
திரு.பி.சந்திரகுமார்               மாநில பொருளாளர்                சென்னை     9840305804
திரு.ரோமாரவி                       மாநில இணைச்செயலாளர் சென்னை     9841160283
திரு.இரா.சுப்பிரமணி           மாநில இணைச்செயலாளர்  திருச்சி         9443650396


மாவட்ட  அமைப்பாளர்கள்
திரு.டி.கருப்பையா (DPI)                                            சென்னை                       9566116271
திரு.எம்.காஜாமைதீன் (நீதித்துறை)                    தஞ்சாவூர்                      9894745672
திரு.எஸ்.முருகன் (போக்குவரத்துத்துறை)    நாகர்கோயில்              9487944488
திரு.வி.தேவதாஸ் (மருத்துவத்துறை)              நாகர்கோயில்             9442177107
திரு.சி.ராஜீ (மாநகர போக்குவரத்து)                   மதுரை                            9345792650
திரு.மாறன் (ஆட்சியரகம்)                                      திருச்சி                            9442828607
திரு.ரா.பாக்கியராஜ் (அரசு அச்சகம்)                   திருச்சி                            9865266248
திரு.சித்தார்த்தன் (சர்வே)                                        சிவகங்கை                   9487211857
திரு.எம்.வெங்கடேசன் (சமூகநலத்துறை)      சென்னை                      9841797504
திரு.சி.ராமகிருஷ்ணன் (I.T.I)                                  சென்னை                      9941433267


காப்பாளர்கள்
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர்சங்கங்களின் கூட்டமைப்பு
திரு.ஜீ. சிதம்பரநாதன்                       மாநிலத்தலைவர்                              9382837195
திரு.பி.சிம்மச்சந்திரன்                      மாநிலபொதுச்செயலாளர்             9444115936
திரு.டி.எம்.என்.தீபக்                           மாநில துணைத்தலைவர்              9840646953
திரு.சையதுமுஸ்தபா                     மாநில துணை செயலாளர்            9942465959
திருமதி.லலிதாம்பிகை                   துணை செயலாளர்                            9283638604
திரு.பிரபாகரன், எம்.எல்.                 சட்ட ஆலோசகர்                                9444447890

No comments:

Post a Comment