இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 வரை) (பகுதி - 2)

பதிவு எண்:டி.எல்.33004/96
பிரத்தியோக இந்திய அரசிதழ்.

பகுதி - 2, பிரிவு - 1.

அதிகாரபூர்வ வெளியீடு ----------------
எண்:1, புதுடில்லி, திங்கள் ஜனவரி 1,1996
பவுசா - 11                         1917
தனி தொகுப்பாக வைக்கும பொருட்டு இப்பகுதிக்கு தனித்தனி பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சட்டம் நீதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் (சட்டத்துறை)
1 ஜனவரி 1996 புதுடில்லி பவுசா - 11     1917(ச.க.)

பின்வரும் நாடாளுமன்ற சட்டம் 1996 ஜனவரி முதல் தேதியன்று குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று, தகவல் அறிவிப்புக்காக இங்கே வெளியிடப்படுகிறது

ஊனமுற்ற நபர்கள், (சமவாய்ப்பு உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, எண்:1, 1996 (1 ஜனவரி 1996)

ஆசிய பசிபிக் பகுதியில் ஊனமுற்ற நபர்களின் சமத்துவம் மற்றும் முழுமையான பங்கேற்பு குறித்த பிரகடனத்திற்கு செயல் வடிவம் அளிக்கும வகையில் ஆனது இச்சட்டம்.

ஆசிய பசிபிக் பகுதிக்கான சமூக பொருளாதார கமிஷன் இப்பகுதியில் ஊனமுற்ற மக்களின் சமத்துவம் மற்றும் முழு பங்கேற்புக்காக 1993 முதல் 2002 வரை இப்பகுதியில் ஊனமுற்ற மக்களுக்கான பத்தாண்டாக அனுசரிப்பதற்கு எண்ணி, 1992 டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை பெய்ஜிங் நகரில் கூடி பிரகடனம் இயற்றி இருப்பதாலும், மேற்படி பிரகடனத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டு இருப்பதாலும், மேற்கூறியுள்ள பிரகடனத்தை அமுலாக்க வேண்டியது அவசியம் என கருதப்படுகிறது.

இந்திய குடியரசு ஆன 46ம் ஆண்டு நாடாளுமன்றம் பின்வருமாறு இச்சட்டத்தை நிறைவேற்றுவதாக.

பொருளடக்கம்

அத்தியாயம்.
1) பூர்வாங்கம்
    சிறுதலைப்பு,  அளவு, ஆரம்பம், விதிகள்.

2) மத்திய ஒருங்கிணைப்பு குழு
    உறுப்பினர்களின் பதவிக்காலம்.
    தகுதி இழப்பு
    உறுப்பினர்களின் பதவி விலகல்.
    மத்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்
    மத்திய செயற்குழு
    மத்திய செயற்குழுவின் பணிகள்
    மத்திய செயற்குழுவின் கூட்டங்கள்
    மத்திய செயற்குழுவின் உடன் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக
                                                             நபர்களின் தற்காலிக வருகை.

3. மாநில ஒருங்கிணைப்பு குழு
    உறுப்பினர்களின் பணி விதிமுறைகள்
    தகுதி இழப்பு
    பதவி விலகல்
    மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்
    மாநில ஒருங்கிணைப்பு குழு பணிகள்
    மாநில செயற்குழு
    மாநில செயற்குழு பணிகள்
    மாநில செயற்குழு கூட்டங்கள்
    மாநில செயற்குழுவுடன் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக
                                                             நபர்களின் தற்காலிக வருகை
    பணிக்கும் அதிகாரம்
    காலி இடங்கள் நடவடிக்கைகளை செல்லுபடியின்மை ஆக்க

4. ஊனங்களை தடத்தல் மற்றும் ஆரம் நிலையில் கண்டறிதல் முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் ஊனங்கள் ஏற்படுவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுத்தல்.


 சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:5முதல் 14 முடிய)    (பகுதி - 3) தொடரும்.

No comments:

Post a Comment