அத்தியாயம் - 3.
மாநில ஒருந்கிணைப்பு குழு : -
பி.(13). து.பி.(1) ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பாணை மூலம் மாநில ஒருங்கிணைப்பு குழு என ஒரு அமைப்பை நிறுவி இச்சட்டத்தின் கீழ் அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
து.பி.(2) மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் அடங்கியிருப்பவர்கள்.
அ. மாநில அரசின் சமூக நலத்துறை அமைச்சர் வகிக்கும் பதவியால் தலைவர்.
ஆ. சமூக நலத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஸ்டேட் அமைச்சர் எவரேனும் இருந்தால் வகிக்கும் பதவியால் துணைத்தலைவர்.
இ. மாநில அரசின் துறைப் பொறுப்பு வகிக்கும் செயலர்கள் :
நலவாழ்வு, கலவி, மகளிர் மற்றும் குழந்தை முன்னேற்றம், செலவினம் பணியாளர்கள், பயிற்சி, மக்கள் குறை, சுகாதாரம், கிராமப்புற முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி மற்றம் பணி வாய்ப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பப்ளிக் எண்டர்பிரைசஸ் அது எந்த பெயரால் அழைக்கப்பட்டாலும் வகிக்கும் பதவியால் உறுப்பினர்கள்.
ஈ. மாநில அரசு அவசியம் எனக் கருதும் மற்றத்துறை செயலர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
உ. தலைவர், பப்ளிக் எண்டர்பிரைசஸ் (வேறு எந்த பெயரால் அழைக்கப்படலாம்) வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
ஊ. ஊனமுற்ற நபர்கள், இயன்றளவு ஐந்து பேர் பிரிவிற்கு ஒருவர் வீதம், ஊனங்களுடன் தொடர்பு கொண்ட அரசு சாரா ஸ்தாபனங்கள் மற்றும் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் உறுப்பினர்கள். எனினும் இவ்விதியின் கீழ் நபர்களை நியமிக்கும்போது தாழ்த்தப்பட்ட இனத்தை அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
எ. மாநில சட்டமன்ற உறுப்னர் மூவர், இருவர் சட்டப்பேரவையாலும் ஒருவர் சட்ட மேலவையாலும் (அப்படி ஒன்று இருந்தால்) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஏ. மாநில அரசால் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வேளாண்மை, தொழில் அல்லது வணிகம் அல்லது பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என மாநில அரசு கருதும் விஷயங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பர். இவர்கள் வகிக்கும் பணியால் உறுப்பினர்.
ஐ. ஆணையர், வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
ஒ. மாநில அரசில் ஊனமுற்றோர் நலனை கவனிக்கும் செயலர் வகிக்கும் பதவியால் ஊறப்பினர் செயலாளர்.
து.பி.(3) இப்பிரிவில் அடங்கியுள்ள விஷயங்கள் எப்படி இருப்பினும் யூனியன் பிரதேசத்திற்கு மாநில ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படமாட்டாது. மத்திய ஒருங்கிணைப்பு குழுவே யூனியன் பிரதேசத்தில், பணிகளை மெற்கொண்டு யூனியன் பிரதேசத்தில் மாநில ஒருங்கிணைப்புகுழு, மத்திய அரசால் குறிப்பிடப்படும் ஒரு நபர் அல்லது நபர்களைக் கொண்ட ஒரு குழுவிடம் தனது அனைத்து அல்லது ஏதாவது ஒரு அதிகாரத்தையோ, பணிகளையோ, இத்துணை பிரிவின் கீழ் ஒப்படைக்கலாம்.
பகுதி - 11 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3 - தொடரும்
No comments:
Post a Comment