இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறன் அரசுப்பணியாளர் மாநில மாநாடு



அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு
19-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

திருச்சி, ஜீன் 17, அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாநில மாநாடு வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.


தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்த அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் ந4லச்சங்கத்தின் மாநில மாநாடு வரும் சனிக்கிழமை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக்கழக சேவை மையத்தில் நடைபெற உள்ளது.

மாநில மாநாட்டிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், மாநில பொதுச்செயலாளருமான பொன்னுசாமி தலைமை வகிக்கிறார்.  மாநில தலைவர் சீனிவாசன் வரவேற்றுபேசுகிறார்.  மாநில பொருளாளர் சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார்.

அமைச்சர் பங்கேற்பு
மாநாட்டில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திரமாவளவன்,  டி.கே.எஸ்.இளங்கோவன், சமூகநல வாரியத்தலைவர் கவிஞர் சல்மா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சிதம்பரநாதன், பொதுச்செயலாளர் சிம்மச்சந்திரன், நலவாரிய உறுப்பினர்கள் தீபக், தங்கம் உள்பட பலர் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

திருச்சிமண்டல தலைவர் பெரம்பலூர் சையது முஸ்தபா, மாவட்ட செயலாளர் மாரிக்கண்ணன், அரசு கிளை அச்சகம் பாக்கியராஜ், பொதுப்பணித்துரை ராம்தாஸ், மாவட்ட கலெக்டரகத்தின் மாறன், அரசு வேலை வாய்ப்பு பயிற்சி துரையின் கலைச்செல்வன் மற்றும் சத்தியமூர்த்தி உள்பட பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.  மாநில இணை செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.  இந்த தகவலை மாநில இணை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தங்களின் இந்த சேவை மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com

    ReplyDelete