இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அரியாமை

துக்ளக் வார இதழ் (30-06-2010) செய்தி:

             தற்போது, தமிழக முதல்வர் திடீரென்று எப்போதும் இல்லாத அளவிற்கு,  உடல் உறுப்புகளில் குறையுள்ளவர்கள்பால் அதிக அக்கரை எடுத்து, அவர்களை "மாற்றுத்திறனாளிகள்" என வகைப்படுத்தி, அவர்களுக்கென்று தனி துறையை ஏற்படுத்தி, பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.

            1975-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னுரிமை அளித்து, அரசு வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நடைமுறை உண்டு.  இவர்களில் பலரும் அரசு வேலையில் சேர்ந்த பின்னர், ஒழுஙிகீனங்களில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை - நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

            1997-ஆம் ஆண்டு சென்னையில், மாநில அரசின் அச்சகத்தில் நிறைய கண்பார்வையற்ற தொழிலாளர்கள் வேலை செய்தனர்.  அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இருந்ததனால் நிறைய பெண்களும் ஆண்களும்பல பிரிவுகளில் வேலை செய்தனர், இவர்கள் மற்ற தொழிலாளர்களைப் போல் தகரர்று செய்கின்றனர் என்ற தகவல் கிடைத்தது. ஆச்சரியமுற்ற நான் முழு விசாரணையில் இறங்கி, உண்மை நிலையை அறிந்து அசந்து நின்றேன். 

          கண் பார்வையற்ற ஒருவர், கண் தெரியாத சக பெண் தொழிலாளிகள் நான்கு பேர்களை திருமணம் செய்திருந்தார், சூபர்வைகர்களை பயமுறுத்துதல், சிலரை சண்டைக்கு இழுத்து அடித்து உதைப்பது, என நம்ப முடியாத வகையிலான ஒழுங்கீனங்களை செய்து வந்தார், ஆனால், அவரை அடக்கி ஒடுக்க முடியாத அளவிற்கு, அவர் அப்பகுதி ஆளுங்கட்சியில் பொறுப்பாளர்! அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நான் வேலை நீக்கம் செய்ததை, பல தொழிலாளர்கள் பாராட்டியது, எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.

         இது ஒரு சாம்பிள் தான், இவர்களால் பல வேலைகளைச் சரியான முறையில் செய்ய முடியாது என்பது, அனுபவம் நமக்கு அளித்த பாடம்.  உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு.  அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது என்பது என்பது வேறு என்பதை உணர வேண்டும்.

         சென்ற மாதம், பூந்தமல்லி சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த பார்வையற்றோர் 77 பேருக்கு ஒரு சிறப்பு அரசாணை மூலம் வேலை வழங்கப்பட்டது. அதாவது, மாநில அரசின் புதிய கொள்கையின்படி அரசு ஒரு விதியை வகுத்து, அதன்படி பார்வையற்றவர்களுக்கு 2 சதவிகிதம், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 வதவிகிதம் ஆசிரியர் பணியில் ஒட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.  இந்த 77 கண் பார்வையற்றவர்கள் போக, மேலும் 72 கண்பார்வையற்றவர்களும் இதே பயிற்சி பள்ளியில் படித்துவிட்டு  வேலைக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது,  காரணம், ஆசிரியர் தேர்வாணையத்தினால் நிரப்பட்பட வேண்டிய வேலைகளின் மொத்த எண்ணிக்கையில், 2 சதவிகித இட ஒதுக்கீட்டில் 77 ஆசிரியர் பணியிடங்களே வரும்!.

            ஆனால்,  எங்களுக்கும் உடனே ஆசிரியர் வேலை தர வேண்டும் என்று கூறி, ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர் மீதமுள்ள 72 பேர்களும். இவர்களை சந்தித்த மாற்றத்திறனாளிகள் துறையின் அதிகாரிகள், "பணிமூப்பு அடிப்படையில், உங்களை விட முன்னால் படித்து முடித்தவர்களுக்கு வரிசைக்கிரமத்தில் பணி வழங்கப்பட்டு விட்டது.  அடுத்து வரும் தேர்வில் உங்களுக்கு வேலை கிடைக்கும், காத்திருங்கள்" என்று கூறியிருக்கின்றனர்.

           இந்த அறிவுரையையும் மீறி, மே 26-ஆம் தேதி இவர்கள் 72 பேரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனராம்.  இவர்கள் வேனில் ஏற்றப்பட்டு,  அரசு பொது மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதைக் கேள்விப்பட்ட முதல்வர், காலையில் உணவு அருந்தாமல் நேரே அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கிறார்.  அவர்கள் கலைந்து சென்ற பின்னர்தான் முதல்வர், வீட்டிற்குத் திரும்பி காலை உணவு அருந்துகிறார்.

            இந்த விவரங்கள் மிகப்பெரிய அளவில் ஃபோட்டோ விளம்பரங்களுடன் பத்திரிக்கை செய்தியாகி, முதல்வரின் கருணையை பறைசாற்றுகின்றன.  விதிகளைத் தளர்த்தி இவர்கள் 72 பேருக்கும் வேலை அளிக்கப்படுகிறது.  என்ன நடத்திருக்க முடியும் என்பதை யூகித்தால், ஒன்று - மற்றவர்களுக்கு, அதாவது ஆசிரியர் வேலைக்கு காத்திருக்கும் 72 பேருக்கு கிடைத்திருக்க வேண்டிய வேலையை, கண்பார்வையற்ற 72 பேருக்கு வழங்கியிருக்கலாம்.

               அல்லது - அரசுப்பள்ளிகளில் தேவைக்கு மேல் 72 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வேலை பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இரண்டுமே தவறான நிர்வாக நடவடிக்கைகள்தான் என்பதை முதல்வர் புரிந்துகொள்வது நல்லாட்சிக்கு நல்லது.

------------------------------- துக்ளக் கட்டுரை முடிந்தது  --------------------------------------------


இந்த மாற்றுத்திறனாளர் பற்றிய தரக்குறைவான துக்ளக்கின் கட்டுரைக்கு தங்களது  விமர்சனங்களை கண்டிப்பாக பதிவு செய்யவும்.

2 comments:

  1. இவர் என்ன ஐ.ஏ.எஸ் படித்து என்ன பணிபுரிந்தாரோ? அந்த அண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
    ஐக்கிய நாடுகள் சபையே ஆராய்ந்து மற்றவர்களை விட எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்றும் இவர்களது ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதன் சக்தியைவிட அதிகமாக வேறு ஒரு உறுப்பு செயல்பட்டு சமன் செய்கிறது என்றும் அதனால் இவர்கள் Differently abled அதாவது மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் 2005 பிரகடனத்தில் அறிவித்துள்ளது.
    அந்த சமயங்களில் இவர் கோமாவில் இருந்தார் போன்றுள்ளது.
    அவரவர் வீட்டில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் தான் அவனவனுக்கு அதன் வேதனையும் சோதனையும் புரியும் போலுள்ளது.
    இவரது மூளை செயல்படாமல் போனது போல் கையும் செயல்படாமல் போக ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. எனது யூகம் சரியாக இருக்குமெனில்,இந்த ஆள் லஞ்சம் கொடுத்து ஐ.ஏ.எஸ். முடித்திருப்பான் என்றே தோன்றுகிறது.
    இவனே ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தால் மட்டுமே அதன் வேதனை புரியும்.
    கோமகன் ராகப்பிரியா,மயூரி படத்தில் நடித்தாரே ஒரு பெண்மணி இவர்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எல்லாத் துறையிலும் சாதனையாளர்களாக மிளிர்வது இவனுக்குத் தெரியவில்லை;
    கூசாமல் பொய் சொல்லுவதில் இவன் மன்னன் போலும்.

    ReplyDelete