இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்

சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர்,தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். 

தனது முதல் நூலான "பயணவழிப் பூக்கள்" கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 1)", "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 2)'', ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி இருக்கிறார். "கல்விச் செல்வம்" என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள
இவர், மாற்றுத்திறன் கொண்டோரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், தமிழகம் முழுவதிலுமான‌ 44 மாற்றுத்திறனாளர்களின் கவிதைகளை தொகுத்து ''கவிச்சிதறல்'' என்னும் கவிதைத் தொகுப்பையும், 8 மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைப் பதிவுகள் அடங்கிய "மாற்றுத்திற‌ன் சாதனைச் சிகரங்கள்" என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

இவர் மாற்றுத்திறனுடையோரின் முன்னேற்றத்திற்கு செய்துவரும் முயற்சிகளையும் தமிழ் மோழிக்கு அற்றிவரும் சேவைகளையும் பாராட்டி பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது. இதற்கெள்ளாம் சிகரம் வைத்தார்போன்று எதிர்வரும் தமிழ் செம்மொழி மாநாட்டில்  உரையாற்ற இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. (தலைப்பு : மாற்றுத்திறனுடையோர் பதிவேற்றி நடத்தும் தமிழ் வலைப்பதிவுகள் - பற்றி). இது தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கெளரவமாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இந்த அளவிற்கு பேரும் புகழுடன் விளங்கும் திரு.ஏகலைவன் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த வறுமையுடையது.   தனது தனிப்பட்ட வாழ்வில் வறுமை தான்டவமாடினாளும் தான் தமிழுக்கும் மாற்றுத்திறன் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளை இவர் சிறிதும் தொய்வின்றி செய்துவருவது மிகவும் பாராட்டுதளுக்குறியது.

அதற்கு சான்று கடந்த சனவரி மாதம் இவர் தனது வாசகன் பதிப்பகம் மூலம் பாள்ளாயிரம் ரூபாய் பொருட்செலவில் வெளியிட்ட கவிச்சிதரல் மற்றும் மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள் என்ற நூல்கள்.

 கவிதைத்தொகுப்பு நூலான "கவிச்சிதறல்" இன் முதல் பிரதியினை பிரபல எழுத்தாளர் திரு.லேணா.தமிழ்வாணன் அவர்கள் வெளியிட சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தலைவர் திரு.அத்தியண்ணா அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.


 மாற்றுத்திறனாளர்களில் சாதனைபுரிந்தவர்களை உலகிற்கு வெளிப்படுத்தி வெளிச்சமிட்டக் காட்டும் "மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்" நூலின் முதல் பிரதியினை உரத்த சிந்தனை இதழ் ஆசிரியர் திரு.உதயம். ராம் அவர்கள் வெளியிட கோடைபண்பலை வானொலியின் நிகழ்ச்சி பொருப்பாளர் திருவரங்கம் திரு.முரளி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

இவரது வலைப்பதிவுகள்
1) கவிஞர் ஏகலைவன்
2) பீனிக்ஸ் மனிதர்கள்
3) வாசகன் பதிப்பகம்


(குறிப்பு: மேற்கண்ட வலைதளங்களை பார்க்க விரும்புவோர் அந்தந்த வலைதளங்களின் மீது சொடுக்கவும்)

இவரது படைப்புகள்:

வாசகன் பதிப்பகம்


கவிச்சிதறல்
விலை  ரூபாய் 55.00 மட்டும்
பக்கங்கள் 128









மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்
விலை ரூபாய் 50.00 மட்டும்
பக்கங்கள் 184









கல்விச்செல்வம்
விலை ரூபாய் 6.00 மட்டும்
பக்கங்கள் 40







பயண வழிப்பூக்கள்
விலை ரூபாய் 30.00 மட்டும்
பக்கங்கள் 64







பதிப்பில் இருப்பவை (விரைவில் வெளியிடப்படும்)
1) செந்தமிழே வணக்கம்,
                   விலை ரூ.8.00 மட்டும்
                   40 பக்கங்கள்

2) பெண்மையைப் போற்றுவோம்
                   விலை ரூ.8.00 மட்டும்
                   40 பக்கங்கள்


தொடர்புக்கு:
கவிஞர் ஏகலைவன்,
வாசகன் பதிப்பகம்,
11/96 சங்கிலி ஆசாரி நகர்,
சன்யாசி குண்டு,
சேலம் - 636 015.
செல்லிட பேசி: 9842974697, 9944391668.

No comments:

Post a Comment