இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறனுடையோர்கு புற்றுநோய்?


                       நான் 1991ம் ஆண்டு எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இடதுகாலை முழுமையாக இழந்தவன்.  இன்று புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து கடின முயற்சிக்குப்பிறகு புற்றுநோயின் கோடுமையினை மறந்து (ஆம் அதனைக் கொடுமையென்றே கூற வேண்டும்.
ஏனென்றால் மருத்துவம் தொடங்கி எட்டாவது மாதத்தில் எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரின் காலைப்பிடித்துக்கொண்டு கதறியிருக்கின்றேன், "நான் இறந்தாலும் பரவாயில்லை எனக்கு இந்த மருந்து இனி வேண்டாமென்று" காரணம் அந்த மருந்தின் சக்தி அப்படி.  சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நாம் பூலோகத்தில் அனுபவிக்கும் நரக வேதனை. உடலில் அனைத்து இடங்களிலும் முடி கொட்டிவிடும், எது உண்டாலும் வயிற்றில் சிறிது நேரமே தங்கும் பிறகு உடனடியாக வாந்தி வந்துவிடும்.  இதே விளைவுகள்தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இப்பொழுது செல்லுங்கள்.  புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் பாவத்திற்குறியவர்கள்தானே?) எனது வாழ்வினை நடத்திவருகின்றேன். 

          ஆனால் இதனைப்பற்றி பொருப்பில் இருக்கும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கோ, நடத்துனர்களுக்கோ என்ன தெரியும்?.  விளைவு மாற்றுத்திறனுடையோர்க்கு பேருந்து பயனத்தின்பொழுது புற்றுநோய்க்கான பயணச்சலுகை. விளக்கம் கேட்டால் உனக்கென்ன சலுகை கிடைக்கின்றதா? அத்தோடு நிறுத்திக்கொள்? என்ற அதிபுத்திசாலித்தனமான பதில் கிடைக்கின்றது நடத்துனர்களிடமிருந்து. (குறிப்பு: மேற்காணும் பயணச் சீட்டினை வழங்கிய நடத்துனர் கண்ணியமாக நடந்துகொண்டார்) தமிழில் ஒரு பழமொழி உண்டு "தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்று.

           ஊனமுற்றோர் என்ற வார்த்தை "மாற்றுத்திறனுடையோர்" என்று மாற்றி பல காலமானபின்னும் மாற்றுத்திறனுடையோர் பயணச்சீட்டு என்று வழங்காவிட்டாலும் "ஊனமுற்றோர்" என்ற வார்த்தை கொண்ட பயணச்சீட்டே இன்னும் பல நடத்துனர்கள் வழங்கப்படுவதில்லை என்பது போக்குவரத்துத்துறையின் பணியில் ஈடுபாடின்மையினையையே காட்டுகிறது.

          இனியாவது போக்குவரத்துத்துறை நமது சார்பான பணிகளை சற்று கவனத்துடன் மேற்கொண்டால் இதுபோன்ற மன பாதிப்புகளை நமது மக்களிடமிருந்து குறைக்க முடியும்.

           முயற்சியெடுக்குமா போக்குவரத்துத்துறை?

No comments:

Post a Comment