இந்தியாவில் மாற்றுத்திறனுடையோர்க்கான சட்டங்களை நாம் அறிந்துகொள்ளுவது மிகவும் பயனுள்ளதாகவும், அவசியமான ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல்நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊனமுற்ற நபர்கள் (சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, மசோதாவினை தங்களுக்கு இந்த வலைத்தலம் மூலம் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இம்மசோதா ஊனமுற்ற நபர்களின் (மாற்றுத்திறன் என்ற சொல் அப்போழுது வழக்கத்தில் இல்லாததாலும், அரசியல் சட்ட வார்த்தைகளை நமது விருப்பப்படி மாற்றுவது தவறானது என்பதாலும் இந்த இடுகை முழுக்க ஊனமுறு:றோர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்) உரிமைகளை பாதுகாத்து நல்வாழ்வு அளிப்பதில் நெடுந்தூரம் செல்லும் என்பதை மசோதாவின் பொருளடக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.
உடல், காணல், கேட்டல் மற்றம் மனம் ஆகிய எந்த ஊனம் இருப்பினும் அந்த ஊனத்தின் காரணமாக மட்டும் ஊனமுற்றவர், ஊனமற்றவர் என்ற பேதம் காட்டாமல் ஊனமுற்ற நபர்களிடம் உடன்பாடான நடத்தை மற்றும் பரவலான தகவலறிவு முதலியவற்றை ஏற்படுத்த விரும்பி இந்த இடுகையினை பதிவு செய்கிறோம்.
இது அதிக பக்கங்களைக் கொண்டது என்ற காரணத்தால் தொடர்ச்சியான இடுகைகள் மூலம் இந்த 1995 சட்டத்தினை என்னால் இயன்றவரை தங்களுக்கு வழங்குகின்றேன். இதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் தாங்கள் தவறாமல் எனக்கு உணர்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இதன் மூலம் யாருக்கும் எந்தஒரு தவறான செய்தியும் சென்றடையக் கூடாது என்பதே எங்களது நோக்கம்.
ஊனமுற்றோருக்கான சட்டம் 1995-ஐ உங்களுக்கு வழங்க காரணமாக இருந்த திரு.R.பாக்கியராஜ், அவர்களுக்கு உங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊனமுற்றோருக்கான சட்டம் 1995-ஐ உங்களுக்கு வழங்க காரணமாக இருந்த திரு.R.பாக்கியராஜ், அவர்களுக்கு உங்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள். பயன்பெருங்கள்.
நன்றி.
நாளை : சட்டம் 1995ன் பொருளடக்கம்.
No comments:
Post a Comment