து.பி (1)
மத்திய செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை, மத்திய அரசு நியமித்து இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும்.
து.பி (2) மத்திய செயற்குழுவில் இடம் பெறுபவர்கள் : -
அ. இந்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலர், வகிக்கும் பதவியால் தலைவர்.
ஆ. முதன்மை ஆணையர், வகிக்கும் பதவியால் உறுப்பினர்
இ. சுகாதார பணிகளுக்கான தலைமை இயக்குநர், வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
ஈ. பணி வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான தலைமை இயக்குனர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
உ. இந்திய அரசின் இணைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத ஆறு நபர்கள் பின்வரும் அமைச்சகங்கள் அல்லது துறைகளின் பிரதிநிதிகளாக இடம் பெறுவர். கிராமப்புற வளர்ச்சி, கல்வி, நலவாழ்வு, நிர்வாகஸ்தர்கள், பொது மக்கள் குறைகள், ஓய்வூதியம், நகர்புற விவகாரங்கள் மற்றம் வேலைவாய்ப்பு, மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் வகிக்கும் பதவியால் உறுப்பினர்கள்.
ஊ. மத்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்தில் நீதித்துறை ஆலோசகர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
எ. இரயில்வே வாரியம் ஆலோசகர் (கட்டணம்) வகிக்கும் பதவியால் உறுப்பினர்.
ஏ. மத்திய அரசால் குறித்துரைக்கப்படும் விதத்தில் நான்கு உறுப்பினர்கள் சுழற்சி மறையில் நியமிக்கப்பட்டு மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க நியமிக்கப்படுதல் வேண்டும்.
ஐ. மத்திய அரசின் அபிப்பிராயத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டாக வேண்டம் என்ற விஷயங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய அரசால் ஓரு நபர் நியமிக்கப்படுவார். இவர் உறுப்பினர்.
ஒ. நடைமுறைப்படுத்த இயன்ற கூடியவரை ஐந்து நபர்கள், ஊனமுற்ற நபர்களாக, அரசு சாராத ஸ்தாபனங்கள் மற்றும் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், இந்திய அரசால் நியமிக்கப்பட வேண்டும். இவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊன வகையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இவர்கள் உறுப்பினர்கள், இங்ஙனம், இப்பிரிவின் கீழ் நியமனங்கள் செய்யும்போது, மத்திய அரசு குறைந்தபட்சம் ஒரு நபர் பெண்ணாகவம் ஒரு நபர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
14. இந்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்தில் ஊனமுற்றோர் நலன்களை கவனிக்கும் இணைச்செயலர் வகிக்கும் பதவியால் உறுப்பினர் செயலர்.
து.பி.(3) து.பி.(2) விதி (1) மற்றும் (ஜெ)ப்படி நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மத்திய அரசால் வகுத்துரைக்கப்படும் படிகளைப்பெறுவர்.
து.பி(4) து.பி(2) விதி (1) மற்றும் (ஜெ)ப்படி நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எந்த நேரத்தில் தன் கைப்படி அரசுக்கு எழுதி தனது பதவியை ராஜினாமா செய்யலாம். அத்துடன் அவ்வுறுப்பினரின் பதவியிடம் காலியாகிவிடும்.
மத்திய செயற்குழுவின் பணிகள்
பி.10. து.பி(1) மத்திய செயற்குழு, மத்திய ஒருங்கிணைப்பு குழுவின் செயல்படுத்தும் அங்கமாகும். மத்திய ஒருங்கிணைப்பு குழுவின் தீர்மானங்களை செயல்படுத்தும் பொறுப்பு இதற்கு உண்டு.
து.பி.(2) து.பி (1)யின் சரத்துக்களுக்கு முரண்படாவண்ணம். மத்திய ஒருங்கிணைப்புகுழு ஒப்படைக்கும் வேறு பிற பணிகளையும் மத்திய செயற்குழு செயல்படுத்த வேண்டும்.
மத்திய செயற்குழவின் கூட்டங்கள்
பி.11. மத்திய அரசு வகுத்துரைக்க உள்ள படியான செயல்முறை விதிகளின்படியே மத்திய செயற்குழு குளறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட தனது கூட்டங்களின் அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நோக்கங்களுக்கான மத்திய செயற்குழு தற்காலிகமாக நபர்களை சேர்த்துக்கொள்ளல் : -
பி.12.து.பி(1). இச்சட்டத்தின் கீழ் ஏதாவதொரு பணியைச் செய்ய, பெற விரும்பம் உதவி அல்லது அறிவுரைக்காக, மத்திய அரசு வகுத்துரைக்கவுள்ள விதத்திலும், நோக்கங்களுக்காகவும், மத்திய செயற்குழு, எந்த ஒரு நபரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
து.பி.(2). மத்திய செயற்குழுவுடன், து.பி.(1)யின்படி இணைந்து உள்ள ஒரு நபர்தான் செர்க்கப்பட்டுள்ள நோக்கத்துடன் தோடர்பு உள்ள விதத்தில் மத்திய செயற்குழுவின் விவாதத்தில் வாக்களிக்கும் உரிமை பெறமாட்டார். மேலம், டவேறு எந்த நோக்கத்திற்கும் உறுப்பினர் ஆகமாட்டார்.
து.பி.(3) மேற்படி குழுவில் கூடியுள்ள ஒரு நபர் (து.பி.1யின் படி) மத்திய அரசு வகத்துரைக்கவுள்ளபடி ஏதாவது குறிப்பிட்ட நோக்கத்திற்காக கூட்டத்துக்கு வருகை தந்தாலோ குழுவின் வேறு ஏதாவது பணியை மேற்கொண்டு இருந்தாலோ அதற்கான கட்டணங்கள் மற்றும் படிகள் அளிக்கப்பட வேண்டும்.
பகுதி - 10 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3 - தொடரும்.

No comments:
Post a Comment