(ஒ) "பணி அளிப்பவர்" என்பவர்
(1) அரசைப் பொறுத்த வரையில் துறைத் தலைவர் தன் சார்பாக நியமிக்கும் ஓர் அதிகாரி அல்லது இவ்வாறு எந்த அதிகாரியும் நியமிக்கப்படாத போது, தறைத் தலைவர் மற்றும்,
(2) ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் முதன்மை நிர்வாக அதிகாரி ஆவார்.
(ஓ) "நிறுவனம்" என்பது மத்திய பிராந்திய அல்லது மாநில சட்டத்தின் கீழ் அல்லது சட்டத்தால் நிறுவப்படும் ஒரு கழகம் அல்லது அரசோ, உள்ளாட்சி அமைப்போ நடத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது உதவும் ஒரு அதிகார அமைப்பு அல்லது குழு அல்லது 1956 (1-1956) கம்பேனிகள் சட்டத்தின் கீழ் பிரிவு 617ன் படியான தன்னகத்தே அரசின் துறைகளை கொண்டுள்ள ஓர் அரசு கம்பெனி.
(ஒள) "செவித்திறன் பழுது" என்பது உரையாடல் ஒலி அளவில், நல்ல காதில் 60 தசபெல் அளவுகோல் அல்லது அதிகமாகவோ, இழப்பு இருப்பது.
(க) "ஊனமுள்ள நபர்களுக்கான நிவனம்" என்பது
ஊனமுள்ள நபர்களை, ஏற்றக்கொள்கிற, பார்த்துக்கொள்கிற, பாதுகாக்கின்ற அவர்களுக்கு கல்வி பயிற்சி மறுவாழ்வு மேலும் எந்த ஒரு தேவைகளையும் அளிக்கும் நிறுவனம் ஆகும்.
(ங) "தொழுநோய் குணமாக்கப்பட்ட நபர்கள்" என்பவர்கள்
எந்த நபராவது தொழநோய் குணமான பின்னும், (1) கைகள், பாதங்களில் உணர்ச்சியின்மை, கண்களில் இரப்பைகளிலும் உணர்ச்சியின்மை மற்றும் உணர்ச்சி இருந்து ஓரளவு முடக்கமும் ஆனால் வெளிப்படையான உருக்குலைவுமின்றி இருத்தல்.
2) வெளிப்படையான உருக்குலைவம், உணர்ச்சியும் ஓரளவு முடக்கமும் இருந்தும், கைகளிலும் பாரங்களிலும் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கும் இயக்கம் இருத்தல்.
3) மிகுந்த தேக உருக்குலைவும் முதிர்ந்த வயதும் லாபகரமான தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும், அதுபோலவே "தொழுநோய் குணமானவர்" என்ற சொற்றொடரும் இடையூராக அமைதல், போன்றவைகளால் துன்புறுவர்.
(ச) "நடமாட்ட ஊனம்" என்பது : எலும்புகள் மூட்டுகள் தசைகள் இவற்றில் ஊனம் ஏற்பட்டு நரம்புகளின் இயக்கத்தை கணிசமான அளவு கட்டுப்படுத்துவது அல்லது ஏடதேனும் ஒரு வடிவில் பெறுமூளை பகுதி முடக்கம்.
(ஞ) "மருத்துவ அதிகார அமைப்பு" என்பது, முறையான அரசின் அறிவிக்கை மூலம் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, குறிக்கப்படும் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது நிறுவனம்.
(ட) "மனநோய்" என்பது, மனமுறிவு தவிர இதர மன ஒழுங்கீனம்.
(ண) "மன முறிவு" என்பது ஒரு நபரின், உயர்வுக்கு குறைவான அறிவுத்திறனால் தீர்மானிக்கப்படும், அறிவு வளர்ச்சி முடிவு பெறாத அல்லது, தடைப்படுத்தப்பட்ட மன நிலை,
(த) "குறிப்பாணை" என்பது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணை,
(ந) "ஊனமுற்ற நபர்" என்பவர் மருத்துவ அதிகாரியால் சான்று அளிக்கப்படும் 40%க்கும் கறையாத ஏதேனும் ஓரு ஊனத்தால் துன்புறும் ஒரு நபர்.
(ப) "குறை பார்வை உள்ள நபர்" என்பவர், ஒரு நபருக்கு சிகிச்சை அல்லது தரமான ஒளி முறிவ திருத்தத்திற்கு பின்னரும் பார்வை இயக்கத்தில் பழுது இருந்து. சரியான உதவி உபகரணத்தின் பயனாய் எந்த ஒரு பணியை திட்டமிடவோ அல்லது செய்யவோ தனது பார்வையை உபயோகத்தால் அல்லது உபயோகிக்கும் திறன் பெற்றிருந்தால், அவர் குறைபார்வையுள்ள நபர்.
(ம) "வகுத்துள்ள" என்றால் இச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகளால் வகுக்கப்பட்டுள்ளவாறு,
(ய) "மறுவாழ்வு" என்பது ஊனமுற்ற நபர்கள் உடலாலும், புலனாலும் அறிவுத் திறனாலும், உள்ளத்தாலும் சமூக உணர்வாலும் தம்மால் இயன்ற இயக்க நிலையை அடையவும் பராமரிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல் முறையைக் குறிப்பதாகும்.
(ர) "சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்" என்பது
1) ஊனத்தால் தன்புறும் நபர்களிடையே தமக்க பணியாளர்களை அமர்த்திக்கொள்ள நாடும் நபர்கள்
2) வேலைவாய்ப்புத் தேடிக்கொண்டிருக்கும் ஊனமுற்ற நபர்கள் மற்றும்
3) வேலைவாய்ப்புத் தேடிவரும் ஊனமுற்றநபர்களை நியமிக்கப்பட உள்ள காலி இடங்கள் பற்றிய தகவல்களை பதிவேடுகள் பராமரிப்பதன் மூலமும், வேறு வகையிலோ சேகரிப்பதற்கும் அறித்திடுவதற்கும், அரசால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும் ஓர் இடம் அல்லது அலுவலகம்.
(ல) "மாநில ஒருங்கிணைப்பு குழு" என்பது, பிரிவு 13 துணைப்பிரிவு ஒன்றின்படி அமைக்கபு:புடும் மாநில ஒருங்கிணைப்பு குழு.
(வ) "மாநில செயற்குழு" என்பது, பிரிவு 19 துணைப்பிரிவு ஒன்றின்படி அமைக்கப்படும் மாநில செயற்குழு
No comments:
Post a Comment