திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
இந்த வருடத்திற்கான விழாவினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்துடன் நேயம் அறக்கட்டளையும் இணைந்து மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் இலவச சீறுடை வழங்கும் விழாவினையும் சேர்த்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.